நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக மேலும் நான்கு மரணங்கள் பதிவாகியுள்ளன
இதன்படி, கொழும்பு 10 மாளிகாவத்தை பகுதியை சேர்ந்த 69 வயது பெண் ஒருவரும், வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்த 67 வயது ஆண் ஒருவர் கணேமுள்ள பகுதியை சேர்ந்த 88 வயதான பெண் மற்றும் கொழும்பு புறக்கோட்டை பகுதியை சேர்ந்த 42 வயது பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் கொரோனா மரணங்கள் இந்த நான்கு மரணங்களுடன் சேர்த்து 34ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 227ஆக அதிகரித்துள்ளது
இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று மட்டும் 537 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை ஏழாயிரத்து 723 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
இந்நிலையில், இன்னும் ஐயாயிரத்து 474 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்என்பதும் குறிப்பிடத்தக்கது.