இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை, 100 ஆக அதிகரித்துள்ளது.
ஏறாவூர் பிரதேச செயலகப் பிரிவில் 4 பேருக்கும், மட்டக்களப்பு நகரில், 2 பேருக்கும், இன்று பி.சி,ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறிதிப்படுத்தப்பட்டுள்ளதாக என்று கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் லதாகரன் தெரிவித்துள்ளார்.
செங்கலடியில் வர்த்தக நிலையத்தில் பணியாற்றும் ஒருவருக்கு நேற்று முன்தினம் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, அவரின் குடும்பத்தினர் மூவருக்கு நேற்று தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து இவர்களுடன் நெருங்கிப் பழகிய 2 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர்களுக்கும் இன்று தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏறாவூரிலும் இன்று நான்கு பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, மட்டக்களப்பு மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது என்றும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார்.