கிளிநொச்சி மாவட்டத்தின் ஜெயபுரம் பகுதியில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளான நபர் சமூக முடக்கலை மீறிச் செயற்பட்டமை அம்பலமானதால் ஜெயபுரம் வடக்கு, தெற்கு பகுதிகள் சமூக முடக்கலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
கொழும்பில் பணியாற்றும் ஜெயபுரம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கடந்த 25 ஆம் திகதி கொழும்பிலிருந்து ஜெயபுரம் திரும்பியிருந்த நிலையில், அவரை சுய தனிமையில் இருக்குமாறு பொதுச்சுகாதார உத்தியோகத்தர்களால் அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் அவருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை நேற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
இதேவேளை அவர் தொடர்பில் சுகாதார உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட விசாரணையின் போது. சுயதனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளை மீறி அவர் ஜெயபுரத்தின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் நடமாடியுள்ளமை தெரியவந்திருக்கின்றது.
இந்நிலையில் வடக்கு, தெற்கு ஆகிய இருபகுதிகளும் சமூக முடக்கலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அருவியின் பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.