கிளிநொச்சி வலயக்கல்வி பணிமனை அருகே, டிப்பர் வாகனம், திடீரென பிரேக் போட்டு நிறுத்தியதால், முச்சக்கரவண்டி ஒன்று டிப்பரின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியது.
நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த சிறுவர்கள் உட்பட மூவர் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.