கிளிநொச்சி – பெரியபரந்தன், டி5 கிராமத்தில் நேற்றிரவு வீசிய கடும் காற்றினால் தற்காலிக வீடு ஒன்று சேதமடைந்துள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பம், தற்போது ஆட்டுக் கொட்டிலிலேயே தங்கியுள்ளது. அப்பிரதேசத்தில் வேம்பு ஒன்று முறிந்து வீழ்ந்ததையடுத்து, மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கிராம அலுவலர் ஊடாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
