இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
68 வயதுடைய மாளிகாவத்தை பகுதியை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், இன்றைய நாளில் இதுவரை கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை நான்காகப் பதிவாகியுள்ளது.
அத்துடன், இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது