தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள வலி.தெற்கு பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
வலி.தெற்கு பிரதேச சபையின் சிறப்பு அமர்வு இன்று வெள்ளிக்கிழதை இடம்பெற்றது.
இதன்போது 2021ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டம் பிரதேச சபை தலைவர் தர்ஷனால் சமர்ப்பிக்கப்பட்டது.
வரவு – செலவுத் திட்டத்தை ஆதரித்து ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் பாலசிங்கம் சுரேஷ் முன்மொழிந்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் அன்ரன் வழிமொழிந்தார்.
அதனைத் தொடர்ந்து வரவு செலவுத் திட்டம் சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் 11 பேர், அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் உறுப்பினர்கள் நால்வர், தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர் இருவர் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் முவர் என 20 பேர் ஆதரவாக வாக்களித்தனர்.
ஈபிடிபியின் 4 உறுப்பினர்களும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் இருவர் எதிராக வாக்களித்தனர். சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலா 2 உறுப்பினர்கள் சபைக்கு சமூகமளிக்கவில்லை.
அதனால் வலி.தெற்கு பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இதேவேளை, இம்முறை ஒவ்வொரு வட்டாரத்தின் அபிவிருத்திக்கும் 30 லட்சம் ரூபாயும் ஒவ்வொரு உறுப்பினரால் முன்வைக்கப்படும் முன்மொழிவுக்கு ஒன்றரை லட்சம் ரூபாயும் வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது