யாழ்ப்பாணம் – சுழிபுரம் இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எனினும் பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட இருவர் தலைமறைவாகியுள்ளனர் என்று வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுழிபுரம் மத்தி, குடாக்கனையில் இரு குடும்பங்களுக்கு இடையிலான பகை நேற்று இரவு இரட்டைக் கொலையில் முடிந்தமை குறிப்பிடத்தக்கது.