யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிநாடு செல்வதற்காக சென்ற ஒருவருக்கு, கொழும்பில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து யாழ். மாநகரசபை எல்லைக்குள் வசிக்கும் 12 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் கொழும்பல் இருந்து இலங்கைக்கு வந்த அரியாலையைச் சேர்ந்த ஒருவர், தனிமைப்படுத்தலை முடித்துக் கொண்டு யாழ்ப்பாணம் வந்திருந்தார்.
அவர் மீண்டும் லண்டன் செல்வதற்காக கடந்த 9ஆம் திகதி கொழும்பு சென்று 11ஆம் திகதி பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டிருந்தார். இதன்போது அவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் யாழ்ப்பாணத்தில் அரியாலைப் பகுதியில் தங்கியிருந்த வீடு மற்றும் அவர் நடமாடிய பாண்டியன்தாழ்வு, குருநகர், சுண்டுக்குழி பகுதியில், உள்ள 12 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
முன்னாள் மாகாணசபை உறுப்பினர், பெண் சட்டத்தரணி ஆகியோரின் வீடுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது