தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் வடமாகாண மரநடுகைமாதச் செயற்பாடுகளில் ஒன்றாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (15.11.2020) வாதரவத்தை வீரவாணியின் உள்ளக வீதிகளில் 100 இலுப்பை மரக்கன்றுகள் நடுகைசெய்யப்பட்டன. வீரவாணி சமூக அபிவிருத்திக் குழுவைச் சேர்ந்ததிரு. யோகநாதன் யகேன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன்,பொருளாளர் திரு. க. கேதீஸ்வரநாதன், சூழல் பாதுகாப்பு அணியின் துணைச் செயலாளர் த. யுகேஸ் ஆகியோருடன் கிராமத்து இளைஞர்களும் பங்கேற்றிருந்தனர். நடுகை செய்யப்பட்ட 100 மரக்கன்றுகளையும் பராமரிக்கும் பொறுப்பை வீரவாணி சமூக அபிவிருத்திக் குழு ஏற்றுக்கொண்டுள்ளது.
தமிழகத்தில் சமயகுரவர்களினால் பதிகங்கள் பாடப்பெற்றதிருத்தலங்கள் பலவற்றில் தலவிருட்சங்களாகக் காணப்படுகின்ற இலுப்பைமரம் எமதுபிரதேசத்துக்கும் உரிய ஒரு உள் நாட்டுத் தாவர இனமாகும். எம்மிடையே முன்னர் சூழலியல் ரீதியாகவும் மருத்துவ ரீதியாகவும் மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருந்த இம்மரம் தற்போதுஅதிகம் கவனிக்கப்படாத ஒரு மரமாக எண்ணிக்கையில் குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.