-வாழ்த்துச் செய்தியில் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.
(மன்னார் நிருபர்)
(17-11-2020)
மன்னார் மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மெல் நியமிக்கப்பட்டமை மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகவும்,அவரின் பணி மன்னார் மாவட்ட மக்களுக்கு தேவை என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று (17) விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடுகையில்,,,
பல்லின,மத,கலாச்சாரத்தினை தன்னகத்தே கொண்டு பல சிறப்புகளுடன் புகழ் பெற்று விளங்கும் மன்னார் மாவட்டத்தின் புதிய மாவட்ட அரசாங்க அதிபராக திருமதி நந்தினி ஸ்ரான்லி டிமெல் நியமிக்கப்பட்டதை எண்ணி மகிழ்ச்சி அடைகின்றேன்.
அத்தோடு அவருடைய பணி சிறக்க என்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கின்றேன்.
பணிகள் பலவகை ஆனால் சமகால சூழலில் ஓர் அரச ஊழியனாக இருந்து நடு நிலை வகித்து எல்லோருடைய மனங்களையும் அறிந்து புறிந்து மதித்து பணியாற்றுதல் என்பது கடினமானது.
அவ்வாறான பணியை தனிச்சிறப்புடன் ஆற்றுவீர்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு.
இவ்வாறான பணி சிறக்க வாழ்த்துவதோடு இறைவனை பிராத்தித்து நிற்கின்றேன். என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.