JEKATHEESWRAN PIRASHANTH
மாவீரர் நாள் நினைவேந்தலை அனுஷ்டிக்க நாம் யாரிடமும் அனுமதி பெறத்தேவையில்லை என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று கு புதன்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
“உயிரிழந்த குடும்ப உறுப்பினர்களை நினைவு கூருவதனை யாரும் தடுக்க முடியாது. அதேபோல எமது குடும்ப உறுப்பினர்களை நினைவு கூருவதற்கு நாம் யாரிடமும் அனுமதியும் பெறத் தேவையில்லை.
எனவே மாவீரர்நாள் நினைவேந்தல் நிகழ்வு வழமைபோல் இடம்பெறும். எத்தடைவரினும் அத் தடையை உடைத்து மக்கள் அனைவரும் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப ஒன்று கூடி இந்த மாவீரர் தின நிகழ்வை நடத்துவோம்.
எம்மை கைது செய்தால் கைது செய்யட்டும். ஆனால் மாவீரர் நாள் நிகழ்வை நடத்துவோம்” – என்றார்.