(மன்னார் நிருபர்)
(18-11-2020)
வெளியாகியுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மடு கல்வி வலயத்தில் அதி கூடிய புள்ளியை பெற்று சாதனை படைத்த மாணவி இன்றைய தினம் புதன் கிழமை(18) மதியம் கௌரவிக்கப்பட்டார்.
மடு கல்வி வலயத்தில் ஆண்டாங்களம் றோமன் கத்தோழிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவி விக்ரர் சாள்ஸ் பிரதிக்சா தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 181 புள்ளிகளை பெற்றுள்ளார்.
-குறித்த மாணவிக்கு மடு வலயக்கல்வி பணிப்பாளர் கே.சத்தியபாலன் பதக்கம் மற்றும் பரிசில் வழங்கி கௌரவித்தார்.
-குறித்த நிகழ்வில் மடு வலயக்கல்வி திணைக்கள அதிகாரிகள்,பாடசாலை அதிபர்,ஆசிரியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.