கண்டி பழைய போகம்பறை சிறைச்சாலையில் இருந்து நேற்றிரவு தப்பிச் சென்ற கைதி, கண்டி நகரில் அலுவலகம் ஒன்றுக்கு அருகில் மறைந்திருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டி பழைய போகம்பறை சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 5 கைதிகள் நேற்று இரவு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர்.
இதன்போது 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
மேலும் ஒருவர் தப்பியோடியதையடுத்து, அவரைக் கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.