(மன்னார் நிருபர்)
(18-11-2020)
இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் 75 ஆவது பிறந்த நாளான இன்றைய தினம் புதன் கிழமை அவருக்கு ஆசி வேண்டி மன்னார் மாவட்டத்தில் உள்ள சர்வ மதஸ் தலங்களில் பிரார்த்தனைகள் இடம் பெற்றது.
-அதற்கு அமைவாக மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் இன்று புதன் கிழமை மாலை 6.15 மணியளவில் திருப்பலி இடம் பெற்றது.
மன்னார் புனித செபஸ்தியார் பேராலய பங்குத்தந்தை அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.
இதன் போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டிமேல்,திணைக்கள தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருப்பலியின் போது மன்னார் மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக கடமையாற்றும் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேல் அவர்களின் பணி சிறக்கவும் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.
நாட்டின் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக குறித்த திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.