மாவீரர் நாள் நினைவஞ்சலி தொடர்பில் ஆராய்வதற்காக தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் தற்போது யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடியுள்ளனர்.
வடமாகாண அவைத்தலைவரும், இலங்கை தமிழ் அரசு கட்சியின் மூத்த துணைத்தலைவருமான சீ.வீ.கே.சிவஞானத்தின்- நல்லூர், முத்திரைச்சந்தையடியிலுள்ள இல்லத்தில் இந்த சந்திப்பு மாலை 4மணியளவில் ஆரம்பித்தது.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, புளொட், ரெலோவின் பிரதிநிதிகள், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியினர், தமிழ் தேசிய பசுமை இயக்கம் ஆகிய தரப்புக்கள் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டனர்