பருத்தித்துறை, கோப்பாய், யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுகளில் மாவீரர்தினத்தை அனுஷ்டிப்பதை தடை செய்யக்கோரி நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டுள்ளது.
மாவீரர்தினத்தை அனுஷ்டிப்பதை தடை செய்யக்கோரி வடக்கு, கிழக்கிலுள்ள பொலிஸ் நிலையங்களிற்கு உயர்மட்ட உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இந்த பொலிஸ் நிலையங்களின் சார்பில் நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, மன்னார், வவுனியா நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் கட்டளை வழங்கப்பட்டுள்ளது. அந்த நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் மாவீரர்தினத்தை அனுஷ்டிக்க சில நபர்களின் பெயர் குறிப்பிடப்பட்டு தடை உத்தரவிடப்பட்டுள்ளது.
காங்கேசன்துறை பொலிசார் தாக்கல் செய்த மனுவின் மீதான கட்டளை நாளை வழங்கப்படும்
இந்த நிலையில், யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிசார் தமது பொலிஸ் பிரிவுக்குள் மாவீரர்தினத்தை அனுட்டிக்க தடைகோரி யாழ் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
பருத்தித்துறை பொலிசார், தமது எல்லைக்குள் மாவீரர்தினத்தை அனுட்டிக்க எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட சிலருக்கு தடைவிதிக்க கோரி, பருத்தித்துறை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்