எம் உணவை நாமே எமது வீடுகளில் இயற்கை முறையில் பயிரிடுவதில் உள்ள பயன்களைக் கருத்திற் கொண்டு ஏழுதன்னார்வத் தொண்டு நிறுவனங்களானபுதிய வாழ்வு நிறுவனம், பரந்தன் பழைய மாணவர் சர்வதேச ஒன்றியம், கிளிநொச்சி மக்கள் அமைப்பு, இரட்ணம் அறக்கட்டளை, கல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பு, விருட்சம் தொண்டு நிறுவனம், தாமரை உதவும் கரங்கள் ஒருங்கிணைந்து அதற்கான ஒரு நடைமுறைத் திட்டத்தை வகுத்தோம்.
இத்திட்டத் திற்கமையபரந்தனில், குமரபுரம், காஞ்சிபுரம், கமறிக்குடா ஆகிய கிராமங்களில் வாழும் குடும்பங்களிலிருந்து 97 குடும்பங்களை தெரிவு செய்தோம். இத்தெரிவின் போது, அவர்களின் குடியிருப்புக்களில் பயிர்ச் செய்கைக்கு போதிய நிலம், நன்னீர்வசதி, பாதுகாப்பு சுற்றுவேலி மற்றும் கதிரவவெளிச்சம் ஆகியன உள்ளன என்பது உறுதிப்படுத்திக் கொள்ளப்பட்டது.
தேர்வான பயனாளர்களின் பயிர்ச் செய்கைக்கு வழிகாட்டல் ஆலோசனைகள் வழங்க ஒரு தகுதியும் அனுபவமும் கொண்ட முழுநேர அலுவலர் நியமிக்கப்படடார்.
இவ்வலுவலரின் உதவியுடன் அவர்களுக்கு இயற்கை முறையில் கூட்டுரம் தயாரித்து வளர்பைகளை உருவாக்க பயிற்றப்பட்டது. இதனடிப் படையில் பயனாளர்கள் தமக்கு வழங்கப்பட்ட 100 வளர்பைகளையும் தாமே ஆயத்தப்படுத்தி வழங்கப்பட்ட மரக்கறி நாற்றுகளை நட்டுக்கொண்டனர்.
வெண்டி, கத்தரி, தக்காளி, கறிமிளகாய், புடோல், பாகல், மிளகாய் ஆகியவற்றுடன் இன்றைய சூழலைக் கவனத்திலெடுத்து மஞ்சள், இஞ்சி, ஆகிய பயிர்களும் வழங்கப்பட்டன. இவற்றுடன் முருங்கை மற்றும் கீரை வளர்ப்பு ஊக்குவிக்கப்பட்டது.
இத்திட்டம் நடைபெற்று திருப்திகரமான பயனைத்தருவதுடன் மற்றையவர்களுக்கு ஒரு முன் மாதிரியாகவும் அமைந்துள்ளது.
இத்திட்டப் பயனாளர்களான பரந்தன்மக்கள் பலரும்தாம் வீட்டுத்தோட்டச் செய்கையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செய்ய விருப்பதாக உறுதி கொண்டுள்ளார்கள்.