மன்னார் நிருபர்
(24-11-2020)
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவின் சௌபாக்கிய வேலைத்திட்டத்தின் கீழ் உள் நாட்டு உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில் இறக்குமதி நிறுத்தப்பட்ட தனிய செய்கையை ஊக்குவிக்கும் வகையில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் (மெசிடோ) ஊடாக அதன் மாவட்ட குழு தலைவர் ஜாட்சன் பிகிறாடோ தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை (24) காலை மன்னார் மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பயிர் செய்கையாளர்களுக்கு விதை தானியங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள தச்சனாமருதமடு பகுதியில் தெரிவு செய்யப்பட்ட 25 பயணாளிகளுக்கும், அப்பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட பண்ணை பகுதியில் பயிர் செய்கையை மேற்கொள்வதற்கும் என கௌப்பி, பயறு, உழுந்து போன்ற பயிர் விதைகள் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் மடு பிரதேச செயலாளர் திருமதி.வினோஜிதா மடு திட்டமிடல் அதிகாரி, கிராம சேவகர் மற்றும் மெசிடோ நிறுவன ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டு பயிர் செய்கையினை மேற்கொள்ள தெரிவு செய்யப்பட்ட பயணாளிகளுக்கு விதை தானியங்களை வழங்கி வைத்தனர்.