கல்முனை கல்வி வலயத்துக்கு உட்பட்ட சகல பாடசாலைகளையும் நாளை முதல் ஒருவாரத்திற்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தின் நிகழ்த்தகவாக மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் போது அக்கறைப்பற்று பகுதியில் 21 பேருக்கும் சாய்ந்தமருது பிரதேசத்தில் ஒருவருக்கும் கொவிட்-19 தொற்று உறுதியானது.
இதனையடுத்து, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அநுராத யஹம்பத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பாடசாலைகளை மீள திறப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்