தமிழர் தாயகப்பகுதியில் மாவீரர் நாளினை முன்னெடுப்பதற்கு சிறிலங்கா அரச தடைகளை விதித்துள்ள நிலையில், தாயக மக்களின் உணர்வெழுச்சியின் வடிவமாக உலகத்தமிழ் மாவீரர்நினைவேந்த் நிகழ்வினை இணையவழியே நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுகின்றது.
ஆக்கிரமிப்புக்கும் இனஅழிப்புக்கும் எதிராக போராடினார்களேயன்றி, எவரையும் ஆக்கிரமிப்பதற்காகவோ அடிமை கொள்வதற்காகவோ மாவீரர்கள் போராடவில்லை. ஆனால் இன்று தமிழர் தேசத்தை ஆக்கிரமிப்புச் செய்துள்ள சிறிலங்கா அரசு கட்மைப்பு தமிழர்களின் நினைவேந்தும் உரிமைக்கு தடைவிதித்து வருகின்றது.
இந்நிலையில் தேசப்புதல்வர்களை நினைவேந்தி உலகத்தமிழர் நாம் மாவீரர்கள் என்ற ஒற்றைப்புள்ளியில் உணர்வெழுச்சியோடு ஒன்றுகூடுகிறோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தாயக நேரம் மாலை 6:05க்கு (ஐரோப்பா மதியம் 1:35, நியு யோர்க் காலை 7:35) தொடங்குகின்ற நிகழ்வுகளை www.tgte.tv – Facebook : tgteofficial காணமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக பல்வேறு புலம்பெயர் நாடுகளில் மக்கள் பெருமளவில் பங்கெடுத்து மாவீரர்களை நினைவேந்த முடியாத நிலையும் ஏற்பட்டுள்ள நிலையில் வீடுகளில் இருந்தவாறு மாவீரர்களை நினைவேந்தும் வகையில் இது அமையவிருக்கின்றது.