யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை கடலில் குளித்த போது, அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. காங்கேசன்துறை தல்செவன இராணுவ நட்சத்திர விடுதிக்கு அருகாமையில் நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் கடலில் குளித்துக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் அலையில் அடித்துச் செல்லப்பட்டனர்.
தையிட்டியைச் சேர்ந்த சிவச்சந்திரன் நிரோஜன் (வயது -19), மாசிலாமணி தவச்செல்வம் (வயது -19)ஆகிய இருவருமே கடலலையில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களில் சிவச்சந்திரன் நிரோஜன் என்பவர் நேற்று மாலை 5 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்தனர்.