கிளிநொச்சி- பரந்தன் பகுதியில் கார்த்திகை விளக்கீட்டுக்காக தீபம் ஏற்றிய வயோதிபத் தம்பதியர் இராணுவத்தினரால் மிரட்டப்பட்டு விளக்குகளும் தூக்கி வீசப்பட்டுள்ளன.
கார்த்திகை விளக்கீட்டிற்காக வீட்டு முற்றத்தில் விளக்குகள் ஏற்றப்பட்டிருந்த நிலையில் வளவின் உள்ளே வந்த இராணுவத்தினர் விளக்குகளைத் தூக்கி வீசியுள்ளனர். அதன்பின்னர், வயோதிபரை துப்பாக்கியால் தாக்க வந்தததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்.
பரந்தன் இராணுவ முகாமைச் சேர்ந்தவர்களே இராணுவ சீருடையில் இவ்வாறு அச்சுறுத்தியதுடன் தாக்க முற்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.