(மன்னார் நிருபர்)
(30-11-2020)
மன்னார் மாவட்டத்தை செழிப்பான மாவட்டமாக மாற்று நோக்குடன் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மநாதனின் வழிகாட்டலில் ‘குணரத்தினம் பவுண்டேசனின்’ அனுசரணையுடன் மாவட்ட ரீதியில் 3 அயிரம் நிழல் மரக்கன்றுகள் நாட்டும் நிகழ்வு கடந்த 6 ஆம் திகதி வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
-மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள்,பொது இடங்கள் உள்ளடங்களாக பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நாட்டப்பட்டு வருகின்றது.
-இந்த நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை(30) மடு கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் குறித்த மரக்கன்றுகள் நடும் நிகழ்வு இடம் பெற்றது.இதன் போது மடு வலயப்பல்வி பணிப்பாளர் உற்பட பலர் பலந்து கொண்டனர்.
குறித்த திட்டத்தின் ஊடாக இது வரை 2500 நிழல் கன்றுகள் நடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.