மகர சிறைச்சாலையில் நேற்று மாலை ஏற்பட்ட பதற்ற நிலையை அடுத்து, 4 கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 25 பேர் வரை காயமடைந்துள்ளனர் .
நேற்று மாலை மகர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் சிலர் போராட்டத்தில் இறங்கியதாகவும், அவர்கள் சிறைக்குள் இருந்த பொருட்களை தீயிட்டு எரித்துள்ளனர். மேலும், சிலர் தப்பிச் செல்ல முயன்றனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் பதற்ற நிலை ஏற்பட்டதை அடுத்து, நான்கு பொலிஸ் குழுக்களும், விசேட அதிரடிப்படையினரும் உதவிக்கு அனுப்பப்பட்டனர். இவர்கள் கைதிகளைக் கட்டுப்படுத்துவதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்ட 4 கைதிகளின் உடல்கள் நேற்றிரவு றாகம மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. மேலும் 25 கைதிகள் காயமடைந்த நிலையில், றாகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று, மருத்துவமனைப் பணிப்பாளர் ஷெல்டன் பெரேரா தெரிவித்துள்ளார்.