(மன்னார் நிருபர்)
(01-12-2020)
அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் (American Express) கடனட்டை இணைய பணப் பறிமாற்றத்திற்கு இடமளித்து கடன் அட்டையில் பாவிக்கக்கூடிய முழுத்தொகையும் மோசடி செய்யப்பட்டுள்ளதாக பாதீக்கப்பட்ட மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த வைத்தியர் ஒருவர் குறித்த கடனட்டை நிறுவனத்தினர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ள போதும் குறித்த கடனட்டை நிறுவனம் உரிய பதில் வழங்கவில்லை என அவர் தெரிவித்தார்.
குறித்த கடன் அட்டை குறித்த ஒரு மாதத்திற்குள் அதன் உரிமையாளருக்கு எந்த வித அறிவிப்பும் செய்யாமல் இணைய பணப் பறிமாற்றத்திற்கு இடமளித்து கடன் அட்டையில் பாவிக்கக்கூடிய முழுத்தொகையும் மோசடி செய்யப்பட்டுள்ளதாக பாதீக்கப்பட்ட மன்னாரை சேர்ந்த வைத்தியர் வைத்திய கலாநிதி ஜி.குணசீலன் தெரிவித்தார்.
-இவ்வாறான இணைய பணப் பறிமாற்றம் செய்யும் போது பல்வேறு கடன் அட்டை நிறுவனங்கள் அட்டையின் சேவையினை இடை நிறுத்தி உடனே உரிமையாளருக்கு தெரியப்படுத்துவார்கள்.
ஆனால் குறித்த நடவடிக்கையினை குறித்த கடன் அட்டை நிறுவனம் மேற்கொள்ளவில்லை.ஆனால் அதிகாரம் அளிக்கப்படாத இணைய பணப்பறிமாற்றத்திற்கு இடமளித்து உள்ளனர்.
இது தொடர்பாக குறித்த நிறுவனம் சரியான விளக்கத்தை கொடுக்கவில்லை.மூன்று மாதத்திற்குள் எப்போதும் இது தொடர்பாக அறிவிக்கலாம்.அட்டையினை இடைநிறுத்தி வைக்க தேவையில்லை என பொறுப்பற்ற பதிலை குறித்த கடனட்டை நிறுவனம் வழங்கியதாக அவர் தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இடம் பெற்ற முறைகேடான பணப் பறிமாற்றத்திற்கு யூலை மாதம் அட்டையை இடை நிறுத்தி உள்ளது.
இடை நிறுத்தும் போது குறித்த அட்டையில் எந்த மிகுதியும் இல்லை.அட்டை முழுமையாக பாவிக்கப்பட்டு விட்டது.சுமார் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் (180.000-00) க்கு மேல் முறைகேடான பணப் பறிமாற்றத்திற்கு இடமளித்துள்ளனர்.
-எனவே குறித்த கடனட்டையினை பயண்படுத்துகின்றவர்கள் அவதானமாக இருக்க வேண்டும்.என அவர் தெரிவித்தார்.
-குறித்த மோசடி தொடர்பான ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளார்.