(மன்னார் நிருபர்)
(3-12-2020)
மன்னார் மாவட்டத்தில் ‘புரெவி சூறாவளி’ தாக்கத்தினால் பாதீக்கப்பட்டு இடைத்தங்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனம்(மெசிடோ) இன்று வியாழக்கிழமை(3) மாலை அவசர உதவிகளை வழங்கி வைத்துள்ளது.
-மன்னார் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் மற்றும் மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப் ஆகியோரின் ஆலோசனைக்கு அமைவாக மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனத்தின் தலைவர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் குறித்த உதவிகள் முதற்கட்டமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
பள்ளிமுனை, சித்திவிநாயகர், எழுத்தூர் பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் நலன் கருதி பிஸ்கட்,பால்மா,குழந்தைகளுக்கான பால்மா பக்கட் போன்றவை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.மேலும்
மேலும் இடைத்தங்கள் முகாம்களில் சிறுவர்கள்,வயோதிபர்கள், ஆண்கள்,பெண்கள் என அனைவரும் தங்க வைக்கப்பட்டுள்ளமையினால் அவர்களின் சுகாதார நடவடிக்கைளை கரு;ததில் கொண்டு அனைவருக்கும் முகக்கவசங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.