வடமாகாணத்தில் பெய்துவரும் கன மாழை மற்றும் காற்று காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதுவரை 464 குடும்பங்களை சேர்ந்த 1591 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் டி.என்.சூரியராஜா அதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், யாழ் மாவட்டத்தில் 15 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், 153வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. அத்துடன், இதுவரை 5 இடைத்தங்கல் முகாம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் சூரியராஜா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக சண்டிலிப்பாய், சாவகச்சேரி, பருத்தித்துறை, தெல்லிப்பழை மற்றும் வேலணை ஆகிய பகுதிகளிலேயே குறித்த இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அத்தோடு வேலணை பகுதியை சேர்ந்த 2 பேரும், சங்கானை பகுதியை சேர்ந்த ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும், 4 நபர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாதாகவும், யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் டி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.