(வன்னி நிருபர்)
முல்லைத்தீவு நந்திக்கடலில் காற்றில் இழுத்துச் செல்லப்பட்ட வள்ளத்தை மீட்கச் சென்ற போது, நேற்று காணாமல் போன மீனவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கேப்பாபுலவு மாதிரிக் கிராமத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளில் தந்தையான 26 வயதுடைய ஜெயசீலன் சிலக்சன் என்பவர் இன்று காலை உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.