வலிகாமம் கிழக்கப் பிரதேச சபைத் தவிசாளர் அபிவிருத்திகளுக்குத் தடைபோடுகின்றார் எனக் குற்றஞ்சாட்டி வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்பாக அச்செழுவில் உள்ள அம்மன் வீதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ் ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிசார் பிரதேச சபை வாயிலுடன் மறித்து நிறுத்திய நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் நேரில் சென்று சந்தித்து உண்மை நிலையைப் புரிய வைத்ததுடன் ஆர்பாட்டக்காரர்களுடன் குறித்த வீதிவரை சென்று மக்கள் சந்திப்பினை நடத்தியுள்ளார்.
தவிசாளர் அபிவிருத்தியைத்தடை செய்கின்றார் என்று தெரிவித்தும் சாதிய அடிப்படையில் அச்செழு அம்மன் வீதி அபிவிருத்தி செய்யப்படவில்லை எனக் குற்றம்சுமத்தியும் கடந்த இரண்டு நாட்களாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை அரசியல் பின்னனியுடையோர் ஏற்பாடு செய்யப்பாடு செய்தனர். எனினும் குறித்த ஆர்பாட்டத்தில் இன்றைய தினம் 35 க்கு உட்பட்டவர்களே பங்கெடுத்தனர். அவர்கள் மினிவான் மூலம் கொண்டுவரப்பட்டு இறக்கிவிடப்பட்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் புத்தூர் சந்தியில் இருந்து சுலோகங்கள், பனர்களுடன் பிரதேச சபையை அண்மித்தபோது பிரதேச சபை வாயிலில் வைத்து பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களை மறித்தனர்.
இந் நிலையில் அவர்களை கடந்த சில தினங்களாக நெருக்கடிகளை எதிர்கொண்ட நிலையில் இன்று கடமையாற்றிக்கொண்டிருந்த தவிசாளர் தானக நேரில் சென்று மக்களின் கருத்துக்களை கேட்டறிந்தார். ஆர்ப்பாட்டத்தில் கர்ப்பிணித்தாய் ஒருவர் நிற்கின்றார் என்பதை அவதானித்து அவருக்கு தானே கதிரை ஒன்றையும் எடுத்துவந்து வழங்கி அமரவைத்து விட்டு மக்களிடம் அபிவிருத்திக்குத் தாம் தடையல்ல உரிய சட்டதிட்டங்கள் அதிகாரப்பகிர்விற்கு மதிப்பளித்த அபிவிருத்தியையே நாம் வரவேற்கின்றோம் என நீண்ட விளக்கத்தினை வழங்கினார். தவிசாளரின் விளக்கத்தின் பின் கேள்விகளைக் கேட்ட மக்கள் திருப்தியடைந்தனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் கிராமத்தில் இருந்து 23 போர் விடுதலைப்போராட்டத்தில் மாவீரர்களாகியுள்ளனர் என்பதையும் தவிசாளரின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் தவிசாளர் உடனேயே அவர்களது வீடுவரை சென்று குறைநிறைகளை கேட்டறிந்த சம்பவம் இடம்பெற்றது. இதன்போது வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் உப தவிசாளர் மகேந்திரலிங்கம் கபிலனும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.