இலங்கையில் மிகுந்த அத்தியாவசிய அரச நிறுவனம் என்று கருதப்படும் இலங்கைக்கான தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்கள் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்வு நேற்று வியாழக்கிழமை முற்பகல் தேர்தல்கள் ராஜகிரியிலுள்ள ஆணைக்குழுவின் அலுவலகத்தில் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்வில் ஓய்வு பெற்ற ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உள்ளிட்டோர் பங்குபற்றியிருந்தனர்என்பது குறிப்பிடத்தக்கது. தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்ட உறுப்பினர்கள் பெயர்கள் பின்வருமாறு:
தேர்தல்கள் ஆணைக்குழு நிமல் ஜீ புஞ்சிஹேவா – தலைவர் எம்.எம். மொஹம்மட் எஸ்.பி. திவாரத்ன கே.பி.பி. பத்திரண ஜீவன் தியாகராஜா ஆகியோர். இதேவேளை, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினர்களும் நேற்று வியாழக்கிழமை முற்பகல் தமது கடமையினை பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்நிகழ்வு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்திலுள்ள அதன் அலுவலகத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர்கள் பின்வருமாறு: சந்திரா பெனாண்டோ – தலைவர் லியனகம ஏ.எஸ்.பீ.எஸ். பிரியந்த சஞ்சீவ என்.எஸ்.எம். சம்சுதீன் குணபால விக்ரமகே பிரேமசிறி பெரேரா டீ.பீ. பரமேஸ்வரன்ஆகியோர்.