யாழ்ப்பாணம், மருதனார்மடத்தில் மேற்கொள்ளப்பட்ட எழுமாற்று பி.சி.ஆர். பரிசோதனையில் ஒருவருக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் உறுதிப்படுத்தியுள்ளார்.
அவர் மரக்கறி கடை ஒன்று நடத்துபவர் என்றும், முச்சக்கர வண்டிச் சாரதி என்றும் தெரிவிக்கப்படுகின்றது. அவருடன் தொடர்புடையவர்களை இனங்காணும் நடவடிக்கைகளில் சுகாதாரப் பகுதியினர் ஈடுபட்டுள்ளனர்.