(மன்னார் நிருபர்)
(15-12-2020)
மாந்தை மேற்கு மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தொழில் முயற்சிகளில் ஒன்றாகிய ‘நலச்சுவையம்’ மற்றும் தோட்டம் ஆகியவை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(15) காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
‘நலச்சுவையம்’ மற்றும் தோட்டம் ஆகியவற்றை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேல் வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
திருமதி வேலு தவமணி அவர்களினால் மாற்றுத்திறனாளிகள் அமைப்பிற்கு அன்பளிப்புச் செய்யப்பட்ட வேட்டையா முறிப்பில் அமைந்திருக்கும் காணியிலேயே ஒருங்கிணைந்த பண்ணை முயற்சிகளை ஆரம்பித்துள்ளார்கள்.
குறித்த தோட்டம் மற்றும், மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் சிறு குழுக்களுக்காக வொய்ஸ் நிறுவனத்தால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட குழு நிதிகளை ஒன்றிணைத்து அமைக்கப்பட்ட நலச்சுவையகம் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தகக்து.