யாழ். போதனா வைத்தியசாலை கொரோனா ஆய்வுகூட பரிசோதனையில் சற்று முன்னதாக எழுவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ் போதனா வைத்தியசாலை கொரோனா ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்படும் பரிசோதனை முடிவுகள் தொடர்பில் வெளியிடும் நாளாந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 402 பேருக்கு covid-19 பரிசோதனை செய்யப்பட்டன.
மருதனார்மடம் கொத்தணியில் மேலும் இருவருக்கு தொற்று
ஏழாலையைச் சேர்ந்த 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்பாய் கொரோனா சிகிச்சை நிலையத்தில் நால்வருக்கு தொற்றுறுதி
இது தவிர கோப்பாய் சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருப்பவர்களோடு பராமரிக்க வந்திருக்கும் உறவினர்கள் நான்கு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒருவருக்கு தொற்று
மட்டக்களப்பில் இருந்து போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் எழுவர் தவிர சோதனைக் உட்பட்டவர்களில் ஏனையவர்களுக்கு தொற்று இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஏழாலை தொற்றாளர்கள் இருவரும் மருதனார்மடம் கொத்தணியுடன் தொடர்புபட்டு அடையாளம் கணப்பட்டுள்ளனர். இன்று மாலை ஏற்கனவே 08 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மருதனார்மடம் கொத்தணியில் இன்று தொற்று உறுதி செய்யப்பட்டவ்ரகளது எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஏனைய ஐவரும் கோப்பாய் தனிமைப்படுத்தல் நிலையம் மற்றும் யாழ் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.