கனடாவின் தலைநகரமான ஒட்டாவா மாநகரில் அமைந்துள்ள பிரபலமான வைத்தியசாலை ஒன்றில் முதன் முதலாக கோவிட்-19 தடுப்பூசியை முன்வரியை பணியாளர் ஒருவருக்கும் செலுத்திய பெயரைத் தட்டிக் கொண்டவர்களை பாராட்டும் முகமாக கனடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அவர்களும் அரசாங்கத்தின் சுகாதார அமைச்சர் பற்றி ஹஜ்டு அவர்களும் செவ்வாய்க்கிழமை மதியம் மேற்படி வைத்தியசாலைக்கு விஜயம் செய்து அங்கு பணியாற்றும் அனைவரையும் பாராட்டி மகிழ்ந்தார்கள்.
கனடாவின் பாராளுமன்றம் அமைந்திருக்கும் ஒட்டாவா மாநகரில் அமைந்துள்ள இந்த வைத்தியசாலையின் பிரதம தாதியாகக் கடமையாற்றும் வெனஸ் லுசேரோ என்னும் பெண்மணி பிரதமரையும் சுகாதார அமைச்சரையும் வரவேற்று அவர்கள் இருவரோடும் உரையாடி மகிழ்ந்தார். அவர் பிரதமரிடம் தனது கருத்தைக் கூறுகையில் ” எமது வைத்தியசாலைக்கு இந்த சந்தர்ப்பத்தைத் தந்து எம்மைப் பெருமைப்படித்தியதற்கும் எமது வைத்திய சாலைப் பணியாளர்கள் 100 பேருக்கு உடனடியாக தடுப்பூசியை வழங்க சம்மதம் தெரிவித்ததற்கும் வைத்தியசாலை நிர்வாகத்தின் சார்பாக நன்றி தெரிவிக்கின்றேன்” என்றார்