வடக்கு மாகாணத்தின் அனைத்துப் பொதுச் சந்தைகளும் நாளை முதல் மறு அறிவித்தல் வரும்வரையில் மூடப்படும் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.
மருதனார்மடம் கொத்தணியின் தொடராக அனைத்துச் சந்தைகளின் வியாபாரிகளுக்கும் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் அவற்றின் முடிவுகள் வருவதில் தாமதம் ஏற்பட்டுவருகின்றன. அதுவரையில் ஆபத்தான சூழல் தொடர்ந்தும் நிலவக்கூடிய அபாயம் காணப்படுகிறது.
அதனால் வடக்கு மாகாணத்தின் அனைத்துப் பொதுச் சந்தைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை கடந்த கொரோனா அபாயக் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட நடமாடும் வியாபார சேவை, மற்றும் சமூக இடைவெளிகளுடன் பொது வெளியில் முன்னெடுக்கப்பட்ட வியாபார முறைகள் வெற்றி அளித்துள்ளதால் அந்த நடைமுறைகளைத் தொடருமாறு வியாபாரிகள் அறிவுறுத்தப்படுகின்றனர் என்றும் கேதீஸ்வரன் அருவிக்குத் தெரிவித்தார்.