கனடாவில் சிறியவர்ளும் குழந்தைகளும் குறிப்பாக 16 வயதுக்குட்பட்ட வர்கள் அனைவரும் கோவிட்-19 தடுப்பூசிக்காக காத்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இதற்கு முக்கிய காரணங்கள் பல உள்ளன என்று குறிப்பிட்டுள்ள கனடாவின் மத்திய சுகாதார மையத்தின் முக்கிய அதிகாரிகள் பின்வருமாறு தெரிவித்துள்ளனர்.
தற்போது இறக்குமதி செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகின்ற கோவிட்-19 தடுப்பூசிகள் கட்டாயமாக 16டி வயதுக்கு உட்டபட்டவர்களுக்கு ஏற்புடையது அல்ல என்றும், மேலும் முக்கியமாக கோவிட்-19 பரவலாலும் நோயின் பாதிப்பாலும் அச்சமடைந்துள்ளவர்கள் வயதில் அதிகமானவர்கள் என்றும் சுகாதாரப் பணிகளிலும் மருத்துவப் பணிகளிலும் ஈடுபட்டுள்ள முன்வரிசைப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், அத்துடன் நோயுற்றவர்களை நேரடியாக இருந்து கவனித்து சிகிச்சை அளிப்பவர்கள் என பல தரப்பினர் முதலில் தடுப்பூசி செலுத்தப்படுவதில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேற்படி விடயமாக கருத்துத் தெரவித்த ஒன்றாரியோவில் உள்ள ஒரு வைத்தியசாலையின் மூத்த அதிகாரி ஒருவர்” கோவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்படும் பணியானது மிகவும் மேற்கொள்ளப்படுகின்றது என்றும். தொற்றினால் விரைவில் பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பெற்று இந்த சேவை இடம்பெற்றுவருகின்றது என்றும், உதாரணமாக முதியோர் இல்லங்களில் பணியாற்றும் ஊழியர்கள், அங்கு தங்கியிருக்கும் முதியோர்கள், சுகாதார நல உத்தியோகத்தர்கள் ஆகியோர் முக்கிய மானவர்களாக கருதப்படுகின்றார்கள், எனினும் சிறுவர்களுக்கான தடுப்பூசிகள் தாமதாக தருவிக்கப்படும் விடயமானது சற்று கவலை அளிப்பதாகவும் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் “சில பிரதேசங்களில் சிறுவர்கள் சிறிய அளவில் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் அவர்களின் பலருக்கு அபாயகரமான நிலை தோன்றலாம் என்றும், பல ◌நோய்களால் பீடிக்கப்பட்டவர்கள் மற்றும் அங்கவீனர்கள் ஆகியோர் சிறுவர்களானாலும் நிச்சயமாக தடுப்பூசி செலுத்தப்பட வேண்டியவர்கள் எனக் குறிப்பிட்டார்
இதேபோன்று இன்னொரு மருத்தவர் தனது கருத்தைப் பதிவு செய்கையில், கோவிட்-19 இற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதை நாம் உலகளிவில் கொண்டாட வேண்டும் என்றும், நவீன விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்பான இந்த தடுப்பூசி விடயத்தில் நாம் இளையவர்களை மறந்துவிட்டது பாதகமான ஒரு தவறு என்றும் குறிப்பிட்டார்
இந்த விடயம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த கனடாவின் மத்திய சுகாதார மையத்தின் பிரதம மருத்துவ ஆலோசகரான டாக்டர் சுப்ரியா சர்மா தனது கருத்தைத் தெரிவிக்கையில் “சிறுவர்களுக்கு நாம் தற்போதையை நிலையில் தடுப்பூசியை செலுத்தாவிட்டாலும், அவர்களைச் சூழ்ந்திருக்கும் பெரியவர்களுக்கு கட்டாயம் தடுப்பூசியை செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதற்காக தங்கள் நிறுவனம கலந்துரையாடல்களை நடத்திவருவதாகவும் கூறினார்.