இலங்கையில் நீண்ட நாட்களாக விடுவிக்கப்படாமல் இருக்கும் அரசியல் கைதிகளுக்கு என்னவாயிற்று என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான இராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
போர் முடிந்து பத்தாண்டுகளுக்கு மேலான நிலையிலும் தொடர்ச்சியாக வந்த அரசுகள் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க உளசுத்தியுடன் நடவடிக்கை எடுக்கவில்லை.
ஆனால் தற்போது அமைச்சர் உதய கம்மன்பில இலங்கையில் அரசியல் கைதி என்று எவரும் இல்லை என்று கூறியுள்ளார். இது உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது.
இது தொடர்பில் முன்னாள் அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பியுள்ளார். அவரது தெரிவித்த கருத்துக்களை இந்தக் கானொளியில் காணலாம்.