(மன்னார் நிருபர்)
(19-12-2020)
மண் வாசனை அமைப்பின் ஊடாக மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட ஒரு தொகுதி பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் இன்று சனிக்கிழமை(19) காலை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
-சகல விதமான பாதிப்புகளுக்கும் உள்ளான 71 பெண் தலைமைத்துவ குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்ட நிலையில் முதல் கட்டமாக 30 குடும்பங்களுக்கு 1974 ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொதிகள் இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டது.
மண் வாசனை அமைப்பின் ஊடாக தாய் நிலம் அறக்கட்டளை காரியாலயத்தில் வைத்து, தாய் நிலம் அறக்கட்டளையின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் அந்தோனி சகாயம் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.