கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை குளிரூட்டப்பட்ட கொள்கலன்களில் வைப்பது குறித்த யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக ஆங்கில இணையத்தளமொன்றிற்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் உடல்களை நீண்டகாலம் ஏனையவர்களின் உடல்களுடன் பிரேத அறையில் வைத்திருக்க முடியாது என்பதாலேயே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக இறுதிசடங்குகள் முடிவடையும்வரை கொரோனாவினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை குளிரூட்டப்பட்ட கொள்கலனில் வைத்திருப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐந்து இடங்களில் இவ்வாறான குளிரூட்டப்பட்ட கொள்கலன்களை பயன்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி நீர்கொழும்பு, கண்டி, கிழக்கு மாகாணம் மற்றும் கொழும்பில் குளிரூட்டப்பட்ட கொள்கலன்களை பயன்படுத்தலாம் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்