முல்லைத்தீவு மாவட்டம் வவுனிக்குளத்தினுள் வாகனம் மூழ்கி ஏற்பட்ட விபத்தில் சிக்கியவர்கள் தந்தையும் பிள்ளைகளும் என்று தெரியவந்துள்ளது.
இன்று மாலை வாகனம் ஒன்று குளத்துக்குள் வீழ்ந்ததை அவதானித்த மக்கள் விரைந்து செயற்பட்ட போதிலும் உடனடியாக ஒரு பிள்ளை மீட்கப்பட்டுள்ளார். குறித்த பிள்ளைக்கு பாதிப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது.
இதேவேளை ஒரு மணி நேரத்தின் பின்னர் எட்டுவயது பிள்ளையை வெளியே எடுத்து உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றிருக்கின்றார்கள். மல்லாவி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவன் மேலதிக சிகிச்சைக்காக மாங்குளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அங்கு உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன
பின்னர் வாகனம் மீட்கப்பட்டபோதிலும் தந்தை மற்றும் 02 வயதுடைய இன்னொரு பிள்ளை ஆகியோரை தொடர்ந்தும் தேடிவருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன
வவுனிக்குளம் விபத்தில் தந்தையும் பிள்ளைகளும் மூழ்கியபோது அவர்களுடன் பயணித்த நான்காவது சிறுவன் அயல் வீட்டினைச் சேர்ந்தவர் என்றும் அவருக்கு வயது 13 என்றும் தெரியவந்துள்ளது.
முதலில் மீண்டவர் விபத்தில் சிக்கியவரின் மகன் என்றும் அவர் தானாகவே நீந்திக் கரைசேர்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதுவரை காணாமல் போனவர்களின் சடலங்கள் கிடைக்கப்பெறவில்லை, சம்பவ இடத்தில் கடற்படை, பொலிஸ்-ராணுவம் பிரதேச செயலர் மற்றும் கிராம அலுவலர்கள், பொது அமைப்புக்கள் மக்கள் என பல நூற்று கணக்கானோர் குழுமி உள்ளனர்