(மன்னார் நிருபர்)
(21-12-2020)
வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைளுர் விவகார அமைச்சின்,பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் மன்னாரில் மூன்று நூல்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை(20) மாலை வெளியீடு செய்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த வெளியீட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணியளவில் மன்னார் அடம்பன் மாந்தை வடக்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் தலைமையில் இடம் பெற்றது.
இதன் போது மன்னார் நெருங்கண்டல் கிராம மக்களின் ‘புனித அந்தோனியார் நாடகம்’ மன்னார் இத்திக்கண்டல் சீனிப்புலவர் எழுதிய ‘புனித செபஸ்தியார் வாசகப்பா’, நானாட்டான் பெஞ்சமின் செல்வம் எழுதிய ‘மன்னார் மாதோட்டத் தமிழ்ப் புலவர் சரித்திரன்’ ஆகிய மூன்று நூல்கள் இவ்வாறு வெளியீடு செய்து வைக்கப்பட்டது.
குறித்த வெளியீட்டு விழாவில் விருந்தினர்களாக மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, வட மாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் அ.ஸ்ரான்லி டி மெல், மேலதிக அரசாங்க அதிபர் சி.குணபாலன், மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் உற்பட பலர் கலந்து கொண்டனர்.