யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாக மாணவன் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
வடக்கைச் சேர்ந்த குறித்த மாணவன், வெளிநாடு செல்வதற்காக கொழும்பு சென்ற நிலையில், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, அவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில் அவர், ஐந்து நண்பர்களுடன் நெருங்கிப் பழகியதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளில் இணையவழி மூலம் மாத்திரமே கலந்துகொண்டுள்ளார். இதேவேளை, அவருடன் பழகிய குறித்த ஐவர் தொடர்பாக சுகாதாரப் பிரிவினர் கவனம் செலுத்திவருவதுடன், மாணவனை கொரோனா வைத்தியசாலைக்கு மாற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர் வவுனியாவில் தங்கியிருந்த பகுதிகள் தொடர்பாகவும் சுகாதாரப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.