ரொறன்ரோ தமிழ் இருக்கைக்கான நிதிசேர் நிகழ்ச்சியாக முனைவர் பர்வின் சுல்தானா அவர்களின் சிறப்புரை இடம்பெறவுள்ளது. உலகப்புகழ் பெற்ற தமிழ்ப் பேச்சாளர் முனைவர் பர்வின் சுல்தானா அவர்கள், “தமிழ் என்பதே அறம்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றவுள்ளார். இந்நிகழ்ச்சி டிசம்பர் 27, 2020 ஆம் நாள் முப 11:00 முதல் பிப 12:30 வரை முகநூலூடாக இடம்பெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உன்னதமான வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ் இருக்கைச் செயற்றிட்டத்திற்கு உங்கள் மேலான ஆதரவை நல்குமாறு கேட்டுகொள்கின்றோம்.
ரொறன்ரோப் பல்கலைக்கழக ஸ்காபரோவில் அமையவிருக்கும் தமிழ் இருக்கையானது, தமிழ்க் கற்கை நெறியை வளப்படுத்துவதோடு, தமிழ் மொழிக்கான அடையாளத்தை உலக அரங்கில் மேம்படுத்தும். ரொறன்ரோ தமிழ் இருக்கை பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.torontotamilchair.ca என்ற இணையத்தளத்தை நாடுங்கள் அல்லது 416 707 9104 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள்.