(மன்னார் நிருபர்)
(22-12-2020)
மடு கல்வி வலயத்தில் தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவித்து மதிப்பளிக்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (22) காலை மடு வலயக்கல்வி பணிமனையில் இடம் பெற்றது.
மடு வலயக் கல்வி அலுவலக கல்வி மேம்பாட்டிற்கான அலுவலகம் மற்றும் குனரத்தினம் பவுன்டேசன் ஆகியற்றின் அனுசரனையுடன் மடு வலயக்கல்வி பணிப்பாளர் எஸ்.சத்தியபாலன் தலைமையில் குறித்த கௌரவிப்பு நிகழ்வு இடம் பெற்றது.
இதன் போது மடு கல்வி வலயத்தில் தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 28 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டதோடு, மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
-குறித்த நிகழ்வில் ஆசிரியர்கள்,அதிபர்கள்,பெற்றோர்கள்,மாணவர்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.