கிழக்கு மாகாணத்தில் மூன்றாவது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார்.
குறித்த உயிரிழப்பானது கல்முனை பிராந்தியத்தில் ஏற்பட்ட உயிரிழப்பை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து கிழக்கு மாகாண மக்கள் சுகாதார அமைச்சால் அறிவிக்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை பின்பற்றி உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், தேவைகள் இன்றி வெளியில் செல்வத்தை தவிர்க்குமாறும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள இடங்களுக்கு செல்வதையோ அல்லது அங்கிருந்து வெளியேறுவதையோ தவிர்த்து கொள்ளுமாறும் கேக்கப்பட்டுள்ளனர்