கொரோனாத் தொற்று உறுதியானவரது மனைவியால், வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள அம்மாச்சி உணவகம் மூடப்பட்டுள்ளது.
வவுனியா திருவநாவற்குளத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது.
தொற்று உறுதிசெய்யப்பட்ட குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் மனைவி அம்மாச்சி உணவகத்திற்கு வருகைதந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சுகாதார பிரிவினரின் அறிவுறுத்தல்களிற்கமைய அம்மாச்சி உணவகம் மூடப்பட்டுள்ளது.
இதேவேளை வவுனியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்புகளை பேணிய பலர் தனிமைப்படுத்தலிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதுடன், சில வியாபார நிலையங்களும் பூட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.