ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம், தான் தயாரித்த மூன்றுநிமிடநேர திஸ்ப்ரெட் (The Spread) எனும் குறும்படமானது, ஒரு சக்தி வாய்ந்த செய்தியைக் கொண்டுள்ளது சிறிய மற்றும் அப்பாவித்தனமான செயல்கள்தங்களைச் சுற்றியுள்ளவர்களை எவ்வாறு ஆழமாக பாதிக்கும் என்பதை எடுத்துக் காட்டுவதன் மூலம் பார்வையாளர்களிடையே உணர்ச்சி பூர்வமான செவிசாய்ப்பினைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நடத்தை மாற்றத்தை ஊக்குவிப்பதில் உணர்ச்சி ரீதியான ஒரு இணைப்பு முக்கியமானது; மேலும் அனைத்து குடியிருப்பாளர்களும் தங்களையும், தங்கள் அன்புக்குரியவர்களையும், சமூகத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்கான அன்றாட செயல்களில் விழிப்புடன் இருப்பதற்கான முயற்சியை இது ஏற்படுத்தும்.
தி ஸ்ப்ரெட் (The Spread)
தி ஸ்ப்ரெட் (The Spread) குறும்படம் அன்னா என்னும் ப்ராம்ப்ட்டன் நகர இளம் பெண்ணைப் பற்றியது; இவள் தன்னையும் தன் குடும்பத்தினரையும் கோவிட்- 19 தொற்றுப்பரவலில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அனைத்து விஷயங்களையும் சரியாகச் செய்கிறாள் என்று நினைக்கிறாள். அனா அன்றாடம் தான் தொடர்பு கொண்டவர்களைக் கண்காணித்தபடியும், தொடர்புகளை மட்டுப்படுத்திய படியும் இருந்து வரும் போது, அவளுடைய காதலன் ஜோர்டான் தனது நண்பர்களுடன் ஒரு விருந்தில் கலந்து கொண்டுதன்னையும், அனாவையும் அவளுடைய முழு குடும்பத்தையும் ஆபத்தில் ஆழ்த்துகிறான். உடல்நலம் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தைதி ஸ்ப்ரெட் (The Spread) குறும்படம் குடியிருப்பாளர்களுக்கு நினைவூட்டுகிறது – மேலும் கவனக்குறைவு பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் கூறுகிறது.
சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு பற்றிய நினைவூட்டல்கள்
மாகாணத்தின் அதிதீவிர ஊரடங்கு நிலையின் கீழ் உள்ள நகரங்களில் ஒன்றாக இருக்கும் ப்ராம்ப்ட்டன் நகரில், குடியிருப்புவாசிகள்தங்கள்முகக் கவசங்களைஅணிந்துகொள்வது, உடல் ரீதியான தூரத்தை கடைப்பிடிப்பது, நல்ல சுகாதாரத்தைப் பேணுதல் மற்றும் அவர்களின் அடுத்த வீட்டில் வசிப்பவர்களுடன் மட்டுமேயும் அத்தியாவசிய ஆதரவு அளிப்பவர்களுடனும் மட்டுமேயும் பழகுவது என்பது முன்பைவிட இப்போது முக்கியமானதாகும். COVID-19 தொற்று பரவும் அபாயத்தைக் குறையுங்கள். உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். உங்கள் அன்புக்குரியவர்களைப் பாதுகாத்திடுங்கள். நமது சமூகத்தைப் பாதுகாத்திடுங்கள்.