இலங்கையில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாகப் பரவிவரும் நிலையில், கொடூரமான மெகசின் சிறைச்சாலையில் மட்டும் குறைந்தது 16 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று `குரலற்றவர்களுக்கான குரல்` எனும் அமைப்புத் தெரிவித்துள்ளது.
அதன் ஒருங்கிணைப்பாளரும் விடுவிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதியுமான முருகைய்யா கோமகன் யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது இலங்கை சிறைகளில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
இலங்கையிலுள்ள கடும்போக்கு பௌத்த அமைப்பான பொதுபல சேனாவின் செயலர் ஞானசார தேரரும் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார் என்கிறார் கோமகன்.