உதயன் பத்திரிகைக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளமையை ஏற்க முடியாது. அரசின் இந்தச் செயற்பாடு தமிழ் மக்களை மீண்டும் பயங்கரமான நிலைக்கு கொண்டு சென்று அவர்களின் குரலை நசுக்குவதற்கான முயற்சியாகவே இருக்கின்றது.
இவ்வாறு நானாட்டன் பிரதேச சபையின் தவிசாளர் தி.பரஞ்சோதி தெரிவித்தார். இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில்:
தமிழ் மக்களுக்கான ஊடகமாக நீண்ட காலமாக உதயன் செயற்பட்டு வருகின்றது. உள்ளதை உள்ளபடி கூறும் உதயன் பத்திரிகை மீது பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்துள்ளமை கண்டனத்துக்குரியது.
ஊடகத்துறை சுதந்திரமாக – சுயாதீனமாக செயற்பட அரசு நடவடிக்கை எடுகக்வேண்டும். இவ்வாறான கெடுபிடிகள் மக்கள் மத்தியில் அச்சத்தையே ஏற்படுத்துகின்றது, என்றுள்ளது